ADDED : மே 26, 2026 04:29 AM
ஈரோடு:ஈரோடு, சுத்தானந்தன் நகரை சேர்ந்தவர் ராஜா, 54; ஜவுளி தொழில் செய்கிறார். இவரது மனைவி சில ஆண்டுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். இவரின் மகள்கள் ஹரிணி, 20, கீர்த்தி, 17; ரங்கம்பாளையத்தில் கல்லுாரியில் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி சென்றவர்கள், சில நாட்களில் வீடு திரும்பினர்.
கடந்த, 24ம் தேதி இரவு மீண்டும் மாயமாகி விட்டனர். ராஜா புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், சுந்தரம் தோட்டத்தை சேர்ந்த கார்த்தி மனைவி மைலா. இவர்களது மகள் மோகனா, 19; பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த, 23ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* கருங்கல்பாளையம் குயிலான்தோப்பை சேர்ந்தவர் அமுதா. ஈரோடு தினசரி காய்கறி சந்தையில் இலை வியாபாரம் செய்கிறார். இவரது மகள் ரசிகா, 19; அடிக்கடி மொபைல்போன் பயன்படுத்தியதால் அமுதா கண்டித்தார். இதனால் கடந்த, 24ல் வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
