/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பீர் கேட்டு தாக்கிய நான்கு பேர் கைது
/
பீர் கேட்டு தாக்கிய நான்கு பேர் கைது
ADDED : அக் 26, 2024 08:10 AM
கோபி: கோபி அருகே டாஸ்மாக் கடையில், வாலிப-ரிடம் தகராறு செய்த நால்வரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே சிங்கிரிபாளையத்தை சேர்ந்தவர் அரசகுமார், 27; சிங்கிரிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றார். பீர் பாட்டில் வாங்கி கையில் வைத்து கொண்டிருந்தார். அப்போது காசிபாளையத்தை சேர்ந்த முருகேசன், 43, அரவிந்தன், 21, ஹரீஸ் சந்துரு, 19, ைஹதர் அலி, 19, ஆகியோர் ஏற்க-னவே மது அருந்தி கொண்டிருந்தனர்.அவர்களில் முருகேசன் என்பவர், அரசகுமா-ரிடம் பீர் கேட்டு தகராறு செய்துள்ளார். தர மறுத்த அரசகுமாரை, நால்வரும் சேர்ந்து தாக்கியுள்-ளனர். அரசகுமார் புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிந்து, நால்வரையும் நேற்-றிரவு கைது செய்தனர்.