/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லாரி டிரைவரிடம் வழிப்பறி; 4 வாலிபர்கள் கைது
/
லாரி டிரைவரிடம் வழிப்பறி; 4 வாலிபர்கள் கைது
ADDED : அக் 11, 2025 12:35 AM
பெருந்துறை, சித்தோடு, பேரோடு மாரியம்மன் கோவில் அருகில் வசிப்பவர் கோகுல கண்ணன், 43; பெருந்துறையில் ஒரு பால் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்கிறார். நேற்று முன்தினம் இரவு, 9.00 மணியளவில் மொபட்டில் காஞ்சிக்கோவில் வந்து விட்டு, நசியனுாருக்கு கீழ்பவானி வாய்க்கால் கரையில், பவானி கிளை வாய்க்கால் பிரிவு அருகே சென்றுள்ளார்.
அங்கு நின்றிருந்த நான்கு பேர், ஸ்கூட்டரை வழிமறிக்க, ஒருவன் பணம் கேட்டு மிரட்டியுள்ளான். கொன்று விடுவதாக எச்சரித்து, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த, 11,500 ரூபாய், இரண்டு மொபைல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீசில் கோகுலகண்ணன், நேற்று புகார் செய்தார். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
இதில் காஞ்சிக்கோவில் பெருந்துறை ரோடு, வர்ஷா கார்டன் பிரபு மகன் சாண்டி என்கிற சஞ்சய் கிஷேோர், 21; ஈரோடு காரை வாய்க்கால் அண்ணா டெக்ஸ் பகுதி சவுக்கத் அலி மகன் பகதுார் ரகுமான், 23; ஈரோடு மரப்பாலம் அந்தோனியார் வீதி ஜானி மகன் நிகாத், 22; கோவை சரவணம்பட்டி கீரணம்புதுார் ரோடு அனில்குமார் மகன் தரணிதரன், 19, ஆகியோரை கைது செய்தனர். நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.