ADDED : செப் 11, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, விஜயமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்-ளியில் படிக்கும், பிளஸ் ௧ மாணவ, மாணவியர், 340 பேருக்கு, அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார், வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ''பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் நிதியி-லிருந்து, ௧50 அரசு ஆரம்ப பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்-பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெஞ்ச், டெஸ்க், அறிவியல் ஆய்வு உபகரணங்கள், நீர் சுத்தகரிப்பு யூனிட் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

