/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு பள்ளிக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் இலவச பஸ்; படியூர் ஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்

ADDED : ஜூலை 05, 2024 12:45 AM
காங்கேயம்: காங்கேயம் அருகேயுள்ள படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளில் இருந்து மாணவர்கள் நடந்தும், சைக்கிள்களிலும் வந்து செல்கின்றனர். இதனால் பல மாண-வர்கள், பள்ளிக்கு வர தயக்கம் காட்டினர். இதற்கு தீர்வு காணும் விதமாக, படியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், தனது சொந்த செலவில், 16 லட்சம் ரூபாய் மதிப்பில் புதியதாக பஸ்சை வாங்கி, பள்ளிக்கு வழங்-கினார். இந்த பஸ் சேவை நேற்று தொடங்கியது. அமைச்சர் சாமி-நாதன் சேவையை துவக்கி வைத்து, மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார். பஸ்சில் நான்கு 'சிசிடிவி' கேமராக்கள், ஜி.பி.எஸ்., கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. படியூர் சுற்று வட்டார கிராம பகுதிகளில் ஒரு நாளைக்கு, நான்கு முறை இயக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நிகழ்சியில் மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, காங்-கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன். தி.மு.க., அமைப்பு சாரா அணி மாவட்ட நிர்வாகி சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.