தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச 'சிசிடிவி' பொருத்துதல், பழுது நீக்க பயிற்சி

இலவச 'சிசிடிவி' பொருத்துதல், பழுது நீக்க பயிற்சி

இலவச 'சிசிடிவி' பொருத்துதல், பழுது நீக்க பயிற்சி


ADDED : ஆக 13, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 06:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.

இங்கு வரும், 24 முதல் செப்., 9 வரை, 13 நாட்களுக்கு இலவசமாக 'சிசிடிவி' பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. ஆண், பெண் என இரு பாலரும் பங்கேற்கலாம். பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள், 19 முதல், 49 வயதுக்கு உட்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளோர், 0424 2400338, 72006 50604 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us