ADDED : ஆக 13, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை,:பெருந்துறை, வெங்கமேட்டை சேர்ந்தவர் தினேஷ்குமார், 28, கூலி தொழிலாளி.
இவர் கடந்த, 8ம் தேதி இரவு தனது ஸ்கூட்டியில்,
பெருந்துறை அடுத்த சிலேட்டர் நகர் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த பைக், ஸ்கூட்டி மீது மோதியது. இதில் பலத்த
காயமடைந்த தினேஷ்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு
சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். பெருந்துறை
போலீசார்விசாரித்து வருகின்றனர்.
