/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இலவச வேட்டி தயாரிப்பு விசைத்தறியில் துவக்கம்
/
இலவச வேட்டி தயாரிப்பு விசைத்தறியில் துவக்கம்
ADDED : ஜூலை 01, 2025 01:06 AM
ஈரோடு, தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், பச்சை நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குகிறது. சேலை உற்பத்திக்கான நுால் டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஊடை நுால் மட்டும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
முழு அளவில் நுால் வந்த பிறகே, சேலை உற்பத்தி பணி துவங்கும். இதனிடையே இலவச வேட்டிக்கான நுால் வந்ததால், இரு நாட்களாக, 2,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தயாரிப்பு தொடங்கியுள்ளது. தற்போது ரயான் மற்றும் காட்டன் மார்க்கெட் இல்லாததால், பெரும்பாலான விசைத்தறிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இலவச வேட்டி தயாரிப்பு தொடங்கியுள்ளது, விசைத்தறியாளர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.