ADDED : ஜூலை 23, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே நாயக்கன்காட்டை கடந்துள்ள புதுப்பாளையத்தில், சாலையின்
இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. அவ்வழியே செல்ல வேண்டிய, கனரக
வாகனங்களை, பிரதான சத்தி சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி
செல்கின்றனர்.
இதனால் பிற வாகனங்கள் சீராக பயணிக்க வழியின்றி,
அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக
தினமும் பள்ளி மற்றும் கல்லுாரி வேலை நேரத்தில், பிரதான சாலையை
ஆக்கிரமித்து நிறுத்தி செல்கின்றனர். சம்பந்தப்பட்ட கோபி
போக்குவரத்து பிரிவு போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பிற வாகன
ஓட்டிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
