ADDED : ஜூலை 23, 2026 05:58 AM
ஈரோடு:ஈரோட்டில்,
ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பு
மாநாடு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு அரசு
அனைத்து ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயலர்
சின்னசாமி, மாநில கன்வீனர் ராஜசேகர் உட்பட பலர் பேசினர்.
என்.பி.எஸ்.,
மற்றும் யூ.பி.எஸ்., திட்டங்களை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய
ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். பென்ஷன் சட்ட திருத்தத்தை ரத்து
செய்ய வேண்டும். 8 வது ஊதியக்குழு பரிந்துரை வரம்பில் ஓய்வூதிய
மாற்றத்தை சேர்க்க வேண்டும். டீ.ஏ., - டீ.ஆர்., 25 சதவீதம் ஆகும்
போதெல்லாம், அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும்.
கடைசி
மாத ஊதியத்தில், 67 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். குறைந்த
பட்ச ஓய்வூதியம், 13,000 ரூபாயாக்க வேண்டும். கடைசி மாத ஊதியத்தில்,
50 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கிராசுவிட்டி
உச்ச வரம்பை, 75 லட்சம் ரூபாயாக உயர்த்திட வேண்டும். 65 வயது முதல்
கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட
பஞ்சப்படி தவணைகளை திரும்ப வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு
ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு
வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
