ADDED : ஆக 04, 2026 03:41 AM
பெருந்துறை; பெருந்துறை கோட்டை முனியப்பன் கோவில் அருகில், பெருந்துறை போலீசார் கடந்த மாதம், 26ம் தேதி மாலை வாகன தணிக்கை மேற்கொண்-டனர். அப்போது வந்த ஒரு காரில் சோதனை செய்-ததில், கஞ்சா கடத்தி செல்லப்படுவது தெரிய வந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிலாந்திரி நாயக், 27; ஈரோடு பழைய பூந்துரை ரோடு கோபால், 42; திருப்பூர் நத்தக்காடையூர் முல்வாடிபாளையம் தீபக், 20, என்பது தெரிய வந்தது. காரில் கொண்டு வந்த, 12 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்-தனர். மூவரையும் கைது செய்த போலீசார், நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அபய்குமார் பெகரா, 34, என்-பவரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் பெக-ராவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
