ADDED : ஆக 04, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
கோபி; கோபி அருகே உக்கரம் பஞ்., பெரியார் நகர் அருகே மேற்கு வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஒரு வாரமாக சீரான குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலை சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.
கடத்துார் போலீசார் மற்றும் உக்கரம் பஞ்., அலு-வலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க உரிய வழிவகை செய்வதாக உறுதிய-ளிக்கவே, அனைவரும் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் அரை மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.
