ADDED : நவ 24, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோட்டில் ரவுடி பட்டியலில் இருந்த, ஜங்ஷன் கார்த்தியை, முன் விரோதம் காரணமாக, 2012ல் பிரபல ரவுடி ஸ்டீல் ரவி தலைமையிலான குழு கொலை செய்தது. வழக்கில் ஸ்டீல் ரவி உட்பட அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் ஸ்டீல் ரவியும் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். ஸ்டீல் ரவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும், போதிய ஆதாரமில்லாததால் விடுவிக்கப்படனர்.அதேசமயம் ஜங்ஷன் கார்த்தி கொலை வழக்கு விசாரணை, ஈரோடு மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஆறாவது குற்றவாளியான வேலுார் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதர், 48, விசாரணைக்கு ஆஜராகாமல் ஓராண்டாக தலைமறைவாக இருந்தார்.
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், சூரம்பட்டி போலீசார் ஸ்ரீதரை, வேலுாரில் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
