ADDED : பிப் 06, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி: புன்செய்
புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி பஞ்.,ல், ஜி ராம்ஜி வேலை உறுதி
திட்டத்தில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இவர்களுக்கு இரண்டு மாதங்களாக சரிவர வேலை
வழங்கவில்லை. இந்நிலையில் முறையாக வேலை வழங்க வலியுறுத்தி,
விண்ணப்பள்ளி பஞ்., அலுவலகத்தை தொழிலாளர்கள் நேற்று
முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானிசாகர் யூனியன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை முதல்
வேலை வழங்கப்படும் என உறுதி கூறவே, கலைந்து சென்றனர்.
