/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சூதாட்டம், சேவல் சூதாட்டம் 'ஜோர்'; ஈரோடு மாவட்டத்தில் 20 பேர் கைது
/
சூதாட்டம், சேவல் சூதாட்டம் 'ஜோர்'; ஈரோடு மாவட்டத்தில் 20 பேர் கைது
சூதாட்டம், சேவல் சூதாட்டம் 'ஜோர்'; ஈரோடு மாவட்டத்தில் 20 பேர் கைது
சூதாட்டம், சேவல் சூதாட்டம் 'ஜோர்'; ஈரோடு மாவட்டத்தில் 20 பேர் கைது
ADDED : ஜன 17, 2025 06:18 AM
ஈரோடு: பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக, பல இடங்களில் சூதாட்டம், சேவல் சூதாட்டம் களை கட்டியது. இந்த வகையில் அறச்சலுார், ஓடைகாட்டு தோட்ட பகுதியில் புதரில் சூதாடிய நான்கு பேரை, அறச்சலுார் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சிவகிரி, அண்ணாமேடை விநாயகர் கோவில் பகுதியில் சூதாடிய மூவரையும், மொடக்குறிச்சியில் பாலுசாமி நகரில் ரயில்வே பாலம் அடியில் சூதாடிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
* சென்னிமலை அருகே வாய்ப்பாடியில், சேவல் சண்டை நடப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, சென்னிமலை எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் சென்றனர். அப்போது சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர். சூதாட்டத்துக்கு பயன்படுத்திய நான்கு சேவல், மூன்று டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
* ஆப்பக்கூடல் அருகே குப்பாண்டபாளையம், நாடார் காலனி பகுதியில், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட சத்தியமங்கலம் சின்னசாமி, 45; அரியப்பம்பாளையம் சத்தியமூர்த்தி, 33; குப்பாண்டபாளையம் நாடார் காலனி சதீஷ், 28, என மூன்று பேரை, ஆப்பக்கூடல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.