ADDED : செப் 11, 2026 06:25 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில், விநாயகர் சதுர்த்திக்காக, 1,500க்கும் மேற்பட்ட களிமண் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி வரும், 14ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு எம்.எஸ். சாலையில், சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சாலையோர வியாபாரிகள் கூறியதாவது: அரை அடி முதல், 7 அடி வரையிலான விநாயகர் சிலைகள் கிடைக்கும். மூன்று அடி வரை களிமண்ணால் செய்து தரப்படும். அதற்கு மேல் உயரம் கொண்ட சிலைகள் மரம், காகித கூழால் செய்யப்படும். 150 ரூபாய் முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன.
இவ்வாறு கூறினர்.
