ADDED : செப் 11, 2026 04:06 AM
அ நிறம் | அளவு
கோபி: பத்திரம் கிரயம் செய்ய, 7 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சார் - பதிவாளர் சங்கர், 42, கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், ராயர்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 47. இவர், தன் பத்திரத்தை கிரயம் செய்ய வேண்டி, கவுந்தப்பாடி சார் - பதிவாளர் சங்கர், என்பவரை சந்தித்தார். அவர், 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
கார்த்திகேயன், ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகாரளித்தார்.
நேற்று மாலை 6:30 மணிக்கு, சார் - பதிவாளர் அலுவலகத்தில் வைத்து சங்கரிடம், கார்த்திகேயன் பணத்தை கொடுத்தார். அதை வெற்றி, 30, என்ற பத்திர எழுத்தரிடம் கொடுக்குமாறு கூறினார்.
மறைந்திருந்த போலீசார், சங்கர், வெற்றி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
