ADDED : செப் 11, 2026 04:04 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, வ.உ.சி., மைதானத்தில் நடந்தது. நேற்று, உயரம் தாண்டுதலில், கோபி கலை கல்லுாரி முதலாமாண்டு மாணவி கரோலினி, 19, உயரம் தாண்டிய பின், மறுபுறம் இருந்த பெட் மீது விழுந்தார்.
தொடர்ந்து சறுக்கி விழுந்ததில், அவரது தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், மாணவி நீண்ட நேரம் காத்திருந்தார். ரத்தம் தொடர்ந்து வெளியேறவே, அவர் மயங்கினார். அதன்பின், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பட்ட மாணவி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
