/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம், வெள்ளகோவிலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
/
காங்கேயம், வெள்ளகோவிலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
காங்கேயம், வெள்ளகோவிலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
காங்கேயம், வெள்ளகோவிலில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
ADDED : ஆக 29, 2025 01:33 AM
காங்கேயம், சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காங்கேயம் நகரில் பல்வேறு இடங்களில், 58 விநாயகர் சிலைகள் அமைத்து, சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடந்தது. இந்நிலையில் நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது. இதற்காக காங்கேயம் உடையார் காலனிக்கு சிலைகள் கொண்டு வரப்பட்டன. மாலை, 4:00 மணியளவில் தொடங்கிய, சிலை கரைப்பு ஊர்வலத்துக்கு, இந்து முன்னணி மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். முக்கிய சாலை வழியாக சென்று காங்கேயம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பூஜை செய்தனர். பிறகு சென்னிமலை சாலையில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலுக்கு கொண்டு சென்று கரைத்தனர்.
இதேபோல் வெள்ளகோவிலில், 19 சிலைகள் வைக்கப்பட்டு நேற்று மாலை கடைவீதி வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரவு, 7:30 மணியளவில் வாகனத்தில் ஏற்றப்பட்டு கொடுமுடி கொண்டு செல்லப்பட்டு காவிரி ஆற்றில் சிலைகள் கரைக்கப்பட்டன.
தாராபுரத்தில்....
தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் அமராவதி சிலை அருகே நேற்று மதியம் தொடங்கியது. மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி துவக்கி வைத்து பேசினார். ஊர்வலத்தில் தாராபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வைக்கப்பட்ட, 30க்கும் மேற்பட்ட சிலைகள் வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, ஈஸ்வரன் கோவில் அருகே அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதேபோல் வி.ஹெச்.பி. சார்பில், உடுமலை ரவுண்டானா அருகே மதியம், 3:00 மணியளவில் துவங்கிய ஊர்வலத்தில் மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமையில், 11 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது.