/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
/
பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 01, 2025 01:52 AM
புன்செய்புளியம்பட்டி;சதுர்த்தி விழாவை முன்னிட்டு புன்செய்புளியம்பட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில், 50க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டன. முக்கிய நிகழ்வான சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது.
டாணாபுதுாருக்கு அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. நேற்று மாலை முத்துமாரியம்மன் கோவில் முன்பு மேள தாளத்துடன் துவங்கிய ஊர்வலம், சத்தியமங்கலம் சாலை,பஸ் ஸ்டாண்ட், மாதம்பாளையம் சாலை, பவானிசாகர் சாலை, ஆதிபராசக்தி அம்மன் கோவில் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதி வழியாக சென்றது. ஊர்வலத்தை சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் வேடிக்கை பார்த்தனர். 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், பகுடுதுறை-பவானி ஆற்றில் நேற்றிரவு கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு, 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
முன்னதாக நேற்று இரவு பவானிசாகர் சாலை, எஸ்.ஆர்.டி,நகர் முன், இந்து முன்னணி, பா.ஜ., நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.
* ஈரோடு மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி, மொடக்குறிச்சி வடக்கு ஒன்றியம் சார்பில், மொடக்குறிச்சியில் விநாயகர் சிலை ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் விவேக் குமார் தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட தலைவர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். இதில், 32 சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.