/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாலிபரை தாக்கிய 7 பேர் கும்பல் கைது
/
வாலிபரை தாக்கிய 7 பேர் கும்பல் கைது
ADDED : மே 10, 2024 07:03 AM
ஈரோடு : ஈரோடு, சூரம்பட்டி வலசு, டாஸ்மாக் பாரில் நேற்று முன்தினம் மதியம், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை, அணைக்கட்டு பகுதியை சேர்ந்த, 10 பேர் சரமாரியாக தாக்கினர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.அவரின் புகாரின்படி, சூரம்பட்டிவலசு, எம்.எஸ்.கே.நகர் ரமேஷ், 35, இவரது அண்ணன் சதீஷ், 40; சூரம்பட்டி வலசு, இந்திரா காந்தி வீதி ரகுநாத், 31; அணைக்கட்டு நான்காவது வீதி இந்திரா காந்தி வீதி சரவணன், 26, கிரண், 30; தர்மபுரி, பாலக்கோடு ஜெயக்குமார், 24; பெரியசேமூர், தென்றல் நகர் ஆனந்தகுமார், 35, என ஏழு பேரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். முன் பகையால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் கத்தியை காட்டியதால், ஆத்திரத்தில் தன் பலத்தை காட்ட, சரமாரியாக கும்பலாக தாக்குதல் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.