/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஞ்சா விற்ற மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
/
கஞ்சா விற்ற மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ADDED : ஜூலை 18, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட், முனியப்பன் கோவில் வீதி வசந்த், 28; பெரியசேமூர் கள்ளன்காடு பாலாஜி, 21, அதே பகுதி ஸ்ரீராம் நகர் விக்னேஷ், 28; ஈ.பி.பி.நகர் முருகேஷ், 34, ஆகியோர் கஞ்சா விற்றதாக, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
இதில் வசந்த், பாலாஜி, விக்னேஷ் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதால், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, போலீஸ் தரப்பில் கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. கலெக்டர் இதை ஏற்றதால் மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதையடுத்து மூவரும் கோவை மத்திய சிறையில்
அடைத்தனர்.