வாரச்சந்தை வளாகத்தில் குப்பை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு
வாரச்சந்தை வளாகத்தில் குப்பை கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு
ADDED : ஆக 19, 2026 06:09 AM

அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில், குப்பையிலிருந்து உரம்
தயாரிக்கும் மையம் உள்ளது. நகராட்சியில் தினமும் சேகரமாகும் குப்பை,
உரம் தயாரிக்கும் மையத்தின் அருகே வாரச்சந்தை காலியிடத்தில்
கொட்டப்படுகிறது.
குப்பைக்கு நகராட்சி துப்புரவு ஊழியர்களே
அவ்வப்போது தீ வைத்து எரிக்கின்றனர். நேற்று மாலை குப்பைகளை
ஏற்றிக்கொண்டு நான்கு டாடா ஏஸ் வாகனங்கள் வாரச்சந்தை வளாகத்திற்கு
வந்தன.
இதைக்கண்ட கால்நடை வியாபாரிகள், அப்பகுதி மக்கள்
வாகனங்களை சிறை பிடித்தனர். நகராட்சி சுகாதார ஆய்வாளர்
பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்துக்குள் குப்பையை அகற்ற நடவடிக்கை
எடுக்கப்படும் என உறுதியளிக்கவே வாகனங்களை மக்கள் விடுவித்தனர்.
