ADDED : ஆக 19, 2026 06:10 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்,:ஈரோடு
மாவட்டம் அந்தியூர், கொமராயனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி மதன்.
இவரது மகன் கவின், 15. அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் மகன் டேனியல், 15.
நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டம் கொளத்துார் அரசு நிதி உதவி பெறும்
நிர்மலா பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கின்றனர்.
இருவரும்
நேற்று முன்தினம் காலை, டவுன் பஸ்சில் பள்ளிக்கு புறப்பட்டு,
கொளத்துார் பஸ் ஸ்டாண்ட் வந்தனர். அங்கிருந்து பள்ளிக்கு செல்வில்லை.
காலை, 10:00 மணிக்கு, மாணவர்கள் வரவில்லை என, பள்ளியில் இருந்து தகவல்
கிடைத்தது.இரு மாணவர்களின் பெற்றோரும் பல்வேறு இடங்களில்
தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து நேற்று காலை,
கவினின் தாய் கலா அளித்த புகார்படி, கொளத்துார் போலீசார், 2 பேரையும்
தேடுகின்றனர்.
