ADDED : ஆக 19, 2026 06:10 AM
ஈரோடு:தமிழ்நாடு
ஒருங்கிணைந்த மேடை நடன சங்கங்களின் கூட்டமைப்பின், மாநில அளவிலான
கூட்டம் நிறுவனர் மற்றும் மாநில பொதுச் செயலர் மணிமாறன் தலைமையில்
ஈரோட்டில் நடந்தது. மாநில தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.
மாநில பொருளாளர் நடேசன், நிர்வாகிகள் சீனிவாசன், முத்துசாமி பேசினர்.
பொதுச் செயலர் மணிமாறன் கூறியதாவது: மாநில அளவில் மேடை நடனத்துறையில் பல சங்கங்கள் உள்ளன.ஒவ்வொருவரும்
அவர்களுக்கான விதிகளின்படி செயல்படுவதால், சில இடங்களில்
பிரச்னை எழுகிறது. அவர்களை ஒழுங்கிணைத்து, கூட்டமைப்பு உருவாக்கி
வருகிறோம். தற்போதைய அரசு எங்களை அங்கீகரித்து, எங்கள்
வாழ்வாதாரத்தை காக்க உதவ வேண்டும்.
கலைத்துறையில் உள்ளவரே
முதல்வராக உள்ளதால், அமைச்சர்கள் ராஜ்மோகன், ரமேஷ் போன்றோர் மூலம்
முதல்வரை சந்தித்து, எங்களுக்கு அரசின் உதவிகள், நலவாரியம்,
நலத்திட்ட உதவிகள் வழங்க கோர உள்ளோம். கேரளா, ஆந்திரா, கர்நாடகா,
மஹராஷ்டிரா மாநிலங்களில் எங்களை போன்ற மேடை நடன கலைஞர்களுக்கு
அரசின் அனைத்து சலுகை, ஒத்துழைப்பும் வழங்கப்படுகிறது. அதுபோல
தமிழக அரசும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
