தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு திறப்பு

எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு திறப்பு

எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு திறப்பு


ADDED : அக் 02, 2026 02:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 02:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை, அக். 2

சென்னிமலை டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், சென்னிமலை--உப்பிலிபாளையம் சாலையில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை, பயன்பாட்டுக்கு நேற்று திறக்கப்பட்டது. தகனமே-டையின் பராமரிப்பு, செயல்பாடு, சென்னிமலை சொர்க்கம் அறக்-கட்டளை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சொர்க்கம் அறக்கட்டளை செயலாளர் அசோக் கூறிய-தாவது: தகன மேடையில் உடல்களை எரியூட்ட கட்டணமாக, 4,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை, 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும். மாலை, 6:00 மணிக்கு மேல் தகனம் செய்ய நேரிட்டால் கூடுதலாக, 1,500 ரூபாய் வசூ-லிக்கப்படும். உடலை கொண்டுவர, 10 கி.மீ., சுற்றளவுக்குள் வேன் கட்டணமாக, 1,000 ரூபாய் பெறப்படும். துாரம் கூடினால் கட்டணமும் கூடும்.

இது தொடர்பான விபரம் பெற, 97515-97518 என்ற எண்ணை அணுகலாம். இவ்வாறு கூறினார். காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us