/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காஸ் சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி குடிசை நாசம்
/
காஸ் சிலிண்டர் வெடித்து தீ தொழிலாளி குடிசை நாசம்
ADDED : ஜூலை 15, 2025 01:27 AM
கோபி, கோபி அருகே பெரிய கொரவம்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணுசாமி, 45, கூலி தொழிலாளி; இவரின் மனைவி ராதாமணி, 40; தம்பதிக்கு, 16 வயதில் மகன் உள்ளார். தென்னங்கீற்று மற்றும் தகரம் வேயப்பட்ட குடிசை வீட்டில் வசித்தனர். ராதாமணி நேற்றுமாலை, 6:00 மணிக்கு, காஸ் அடுப்பில் சுடு தண்ணீர் காய வைத்துவிட்டு, குடிசை வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார்.
அப்போது திடீரேன சிலிண்டர் வெடித்து குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. அருகேயிருந்த ஒரு தென்னை மரத்திலும் தீப்பற்றி எரிந்தது. கோபி தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் வீடு மற்றும் வீட்டுக்குள் இருந்த சாமான்கள் முழுக்க தீயில் எரிந்து நாசமானது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.'பஞ்சர்' டயருடன் 35 கி.மீ.,