/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 மாதமாக எரிவாயு தகன பூங்காவுக்கு பூட்டு; பராமரிப்பு பணியை காரணம் காட்டும் நகராட்சி

ADDED : ஜன 28, 2025 06:52 AM
கோபி: கோபி எரிவாயு தகன பூங்கா ஐந்து மாதமாக பூட்டி கிடக்கிறது. இதனால் உடல்களை தகனம் செய்வதில், மக்கள் அவதியுறுகின்றனர்.
கோபி, ராமர் எக்ஸ்டென்சன் வீதியில், நகராட்சி எரிவாயு தகன பூங்கா, 2008 ஜூலை 6ல் தொடங்கியது. முதலில் பையோ காஸில் இயங்கிய நிலையில், எல்.பி.ஜி., காஸுக்கு மாறியது.நமக்கு நாமே திட்டத்தில், 1.20 கோடி ரூபாயில் எரிவாயு தகன பூங்கா மேம்பாட்டு பணி துவங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, 2024 ஆக.,1 முதல், 45 நாட்களுக்கு எரிவாயு தகன பூங்கா தற்காலிகமாக மூடப்படுவதாக நகராட்சி அறிவித்தது. ஆனால் நேற்று வரை, அதாவது ஐந்து மாதங்களாக பூட்டி கிடக்கிறது.
இதனால் கோபி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உடல்களை தகனம் செய்ய, ௫ கி.மீ., துாரத்தில் உள்ள மற்றொரு எரிவாயு தகன பூங்காவுக்கு செல்கின்றனர். நகராட்சி நிர்வாகம், பராமரிப்பு பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி சேர்மன் நாகராஜ் கூறுகையில் ''எரிவாயு தகன பூங்காவில், பராமரிப்பு பணி, 95 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் பத்து நாட்களுக்குள் பயன்பாட்டுக்கு வரும்,'' என்றார்.