ADDED : ஆக 12, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கொல்லம்பாளையம்-பூந்துறை சாலையில் ஒரு ஓட்டல் உள்ளது. நேற்று காலை வழக்கம் போல் டிபன் தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது காஸ் டியூப்பில் கசிவு ஏற்பட்டு ரெகுலேட்டர் தீப்பற்றி கொண்டது.
சாப்பிட வந்தவர்கள் தீ விபத்தை பார்த்து வெளியேறினர். ஓட்டல் உரிமையாளர் ஈரோடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் செல்லும் முன் மக்களே தீயை அணைத்தனர். ரெகுலேட்டர் மட்டும் தீக்கிரையானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.