ADDED : செப் 10, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
இடையன்காட்டுவலசு சின்னமுத்து வீதியை சேர்ந்தவர் சந்திரன், 46.
இவரது மனைவி நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் சமைப்பதற்காக
அடுப்பை பற்ற வைத்தபோது, காஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுக்க பரவியது.
அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி, ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு
தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கசிவு ஏற்பட்ட
காஸ் சிலிண்டரை, வீட்டிற்கு வெளியே எடுத்து வந்தனர். தொடர்ந்து கதவு,
ஜன்னல்களை திறந்து விட்டனர். காஸ் கசிவுக்கு சிலிண்டர் ரெகுலேட்டர்
சரிவர பொருத்தாததே காரணம் என்பது தெரியவந்தது.
