ADDED : செப் 10, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி அருகே இரு பைக்குகள் மோதிய விபத்தில், கூலித்தொழிலாளி பலியானார்.
கோபி அருகே கூகலுாரை சேர்ந்தவர் லோகநாதன், 35, கூலித்தொழிலாளி; இவர் மனைவி மைதிலியுடன், 28, யமாகா பைக்கில், தண்ணீர்பந்தல்புதுார் சாலையில், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த முகிலரசன், 27, என்பவர், ஓட்டி வந்த அப்பாச்சி பைக் லோகநாதனின் பைக் மீது மோதியது. இதில் லோகநாதனின் மனைவிக்கு காயம் ஏற்படவில்லை. அதேசமயம் பைக்கை ஓட்டி வந்த லோகநாதன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
லோகநாதன் மனைவி மைதிலி கொடுத்த புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.
