ADDED : செப் 10, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சூரம்பட்டி
போலீசார், சங்கு நகர் சித்திக், 29, என்பவர் வீட்டில் சோதனை செய்தனர்.
அதில் அவரது வீட்டில் மெப்ஹெண்டர் மைன் சல்பேட் என்ற ஊசி மருந்து, 15
பாட்டில் இருந்தது. இது ஊக்க மருந்து. போதைக்காக பயன்படுத்தப்படுவது
தெரியவந்தது.
தன் சொந்த பயன்பாட்டுக்கும், விற்கவும் வைத்திருந்தது
உறுதியானது. இவர் இண்டியா மார்ட் என்ற ஆப்பில் ஆர்டர் செய்து தனியார்
கூரியர் மூலம் வாங்கி விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
