தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

ஈரோட்டில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்

ஈரோட்டில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்


ADDED : செப் 10, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், வரும், 21 வரை பல்வேறு இடங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

12 முதல் 19 வயதுடையவர்கள் பள்ளி பிரிவிலும், 17 முதல் 25 வயதுடையவர்கள் கல்லுாரி பிரிவிலும், 15 முதல் 35 வயதுடையவர்கள் பொது பிரிவிலும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களும் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இதன்படி 37,349 ஆண்கள், 28,911 பெண்கள் என மொத்தம், 66,260 பேர் பதிவு செய்தனர். இதில் பள்ளி பிரிவுகளில், 24,661 பேர், கல்லுாரி பிரிவில், 15,677 பேர், பொது பிரிவில், 23,807 பேர், அரசு ஊழியர்கள் பிரிவில், 13,089, மாற்றுத்திறனாளிகள், 729 பேர் பங்கேற்க உள்ளனர். இதன்படி முதல் நாளான நேற்று, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த தடகளம், கேரம், கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளை கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு கலை அறிவியல் கல்லுாரியில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கைப்பந்து, மயோன் இறகுப்பந்து அகாடமியில் இறகுப்பந்து, கொங்கு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லுாரியில் கிரிக்கெட், சூர்யா பொறியியல் கல்லுாரியில் பள்ளி மாணவியருக்கான கால்பந்து, கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் கல்லுாரியில் ஹாக்கி, கே.ஓ.எம்., மேல்நிலைப்பள்ளி, புன்செய் புளியம்பட்டியில் பெண்களுக்கான ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் நாள் போட்டியில், 5,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் செந்தில்குமார் ரத்தினம், மாவட்ட விளையாட்டு அலுவலர் திவ்யா நாகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us