தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மேல்நிலை, இடைநிலை அசல் மார்க்ஷீட் தனித்தேர்வர் பெற்று கொள்ள அழைப்பு

மேல்நிலை, இடைநிலை அசல் மார்க்ஷீட் தனித்தேர்வர் பெற்று கொள்ள அழைப்பு

மேல்நிலை, இடைநிலை அசல் மார்க்ஷீட் தனித்தேர்வர் பெற்று கொள்ள அழைப்பு


ADDED : செப் 10, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கடந்த மார்ச், 2ல் மேல்நிலை பொதுத்தேர்வு துவங்கி, 27 வரையும், இடைநிலை பொதுத்தேர்வு மார்ச், 11 - ஏப்., 6 வரை நடந்தது.

அரசு தேர்வுத்துறையால் மே, 8ல் மேல்நிலை தேர்வு முடிவும், மே, 20ல் இடைநிலை தேர்வு முடிவும் வெளியானது. கடந்த ஜூலை, 30ல் மேல்நிலை பொதுத்தேர்வு மார்க்ஷீட்டும், ஆக., 12ல் இடைநிலை பொதுத்தேர்வு மார்க்ஷீட்டும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், தேர்வு மைய தலைமை ஆசிரியர்களிடம் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு வழங்கும் வகையில் வழங்கப்பட்டது.

தனித்தேர்வர்கள், 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய மையங்களில் தேர்வுக்கூட நுழைவு சீட்டை காண்பித்து பெற்று கொள்ளலாம். 90 நாட்களுக்கு பின் தனித்தேர்வர்களால் பெற்று கொள்ளப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள், ஈரோடு அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என,

தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு மையங்களுக்கு மார்க்ஷீட் வழங்கி, 40 நாட்கள் கடந்த நிலையில், பெரும்பாலான தனித்தேர்வர்கள் பெற்று கொள்ளவில்லை. தனித்தேர்வர்கள் உடனடியாக அவர்கள் தேர்வு எழுதிய மையங்களுக்கு சென்று, மார்க்ஷீட்டை பெற்று கொள்ள வேண்டும்.

தவிர அத்தேர்வில் தேர்ச்சி அடையாத தனித்தேர்வர்களும், மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்க, இந்த மார்க்ஷீட் அவசியம் என்பதால், தவறாமல் பெற்று கொள்ள வேண்டும் என, கலெக்டர் கந்தசாமி கேட்டு கொண்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us