/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ
/
சிறுமி கர்ப்பம்: வாலிபர் மீது போக்சோ
ADDED : நவ 27, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சென்னையை சேர்ந்தவர் கார்த்திக், 30; சமூக வலைதளத்தில் ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். திருமண ஆசை வார்த்தை காட்டி நேரில் சந்தித்தவர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
மூன்று மாத கர்ப்பமான நிலையில், இதையறிந்த பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான வாலிபரை தேடி வருகின்றனர்.