தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஆட்டு குட்டியை மீட்டவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆட்டு குட்டியை மீட்டவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

ஆட்டு குட்டியை மீட்டவர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு


ADDED : அக் 25, 2026 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:அவல் பூந்துறை கண்டிக்காட்டு வலசு, வெள்ள பெத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 57. நேற்று முன்தினம் கண்டிக்காட்டு வலசு - சேமூர் சாலையில், கோபால கிருஷ்ணன் தோட்டம் அருகே, பர்வதம் என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு ஆட்டு குட்டி அங்கிருந்த கிணற்றில் விழுந்தது. அவ்வழியே சென்ற லோகநாதன், கிணற்றில் இருந்து ஆட்டு குட்டியை மீட்டார். ஆனால் அவரால் கிணற்றில் இருந்து, மேலே வர முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சித்தனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் லோகநாதனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.அரச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us