/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
/
புளியம்பட்டி சந்தையில் ஆடு விற்பனை மந்தம்
ADDED : டிச 20, 2024 07:09 AM
புன்செய் புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி கால்நடை சந்தை புதன், வியாழக்கிழமை கூடுகிறது. நேற்று கூடிய சந்தைக்கு, 150 வெள்ளாடுகள், 100 செம்மறி ஆடுகள் வந்தன. 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 6,500 முதல், 7,000 ரூபாய்; 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள், 6,500 ரூபாய் வரை விலை போனது. மார்கழி மாதத்தால் இறைச்சி கடைக்காரர் மற்றும் வியாபாரிகள் வருகை குறைந்த நிலையில், ஆடு வளர்ப்போர் அதிக எண்ணிக்கையில் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வழக்கமாக சந்தைக்கு, 400 ஆடுகளுக்கு மேல் விற்பனைக்கு வரும். இன்று, 250 ஆடுகள் மட்டுமே வந்தன. 20 லட்சம் ரூபாய்க்கு, வர்த்தகம் நடந்தது. மார்கழி மாதம் முடியும் வரை ஆடு விற்பனை மந்த நிலையில் தான் இருக்கும். இவ்வாறு கூறினர்.