/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் சாலையில் திரியும் ஆடுகளால் தொல்லை
/
தாராபுரத்தில் சாலையில் திரியும் ஆடுகளால் தொல்லை
ADDED : ஜூன் 25, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் நகரில் தெருக்களில் திரியும் ஆடுகளால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகின்றனர்.
தாராபுரம் நகராட்சி பகுதியில் என்.என்.பேட்டை வீதி, தேவேந்திர தெரு, தாலுகா ஆபீஸ் சாலை பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பகலில் எந்நேரமும் ஆடுகள் சுற்றி திரிகின்றன.
நகரின் மையப் பகுதியாக உள்ள இப்பகுதிகளில் திரியும் ஆடுகளால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.