ADDED : செப் 05, 2026 06:08 AM
சென்னிமலை:வெள்ளோட்டை
அடுத்த தண்ணீர்பந்தல் வேலம்பாளையத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான
சுயம்பு ஸ்ரீகிருஷ்ண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு
தோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி, லட்சார்ச்சனை
நடந்தது வருகிறது. ஏழாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
அதிகாலை கோபூஜையுடன் விழா தொடங்கியது.
சுயம்பு ஸ்ரீ கிருஷ்ண
பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சுதர்சன பட்டாச்சாரியர்
தலைமையில் காலையில் லட்சார்சனை தொடங்கியது. மாலையில் மஹாலட்சுமி,
சுதர்ஷன ேஹாமம், பூர்ணாகுதி, மஹா தீபாராதனை நடந்தது. இதேபோல்
சென்னிமலை - அரச்சலுார் ரோடு வீரப்பன்பாளையத்தில் ஸ்ரீகிருஷ்ண
துளசி கோசாலையில் ஸ்ரீராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி
விழா கொண்டாடப்பட்டது. இதில் குழந்தைகள் ராதை-கிருஷ்ணர் வேடமிட்டு
பசுக்களுடன் கும்மி, கோலாட்டம், நாம சங்கீர்த்தனம் மங்கள
வாத்தியங்களுடன் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து
ஸ்ரீ ராஜகோபால சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி, கிருஷ்ணரின்
கருணை குறித்த உபன்யாசம் நடந்தது.
