ADDED : செப் 05, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூரை
அடுத்த பிரம்மதேசம் ஆலமரம் பஸ் நிறுத்த பகுதியில், பிரம்மதேசம்
வி.ஏ.ஓ., அருள்மணி உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் நேற்று முன்தினம் இரவு
ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆப்பக்கூடலில் இருந்து
பிரம்மதேசம் நோக்கி வந்த ஒரு டிப்பர் லாரியில் சோதனையிட்டனர்.
கருங்கற்கள் கடத்தி செல்வது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த வருவாய்
துறையினர் அந்தியூர் போலீசில் புகாரளித்தனர்.
