ADDED : செப் 05, 2026 06:07 AM
ஈரோடு:ஈரோடு
பெரிய வலசு நால்ரோடு இரட்டை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர்
கண்ணன், 65, தறி பட்டறை தொழிலாளி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர்.
கடந்த
மாதம், 23ம் தேதி மாலை கண்ணன் வீட்டிலிருந்தார். அப்போது
பெரியவலசு சுப்ரமணிய சிவா வீதியை சேர்ந்த சின்னதுரை மகன் தறி
பட்டறை தொழிலாளி சங்கர், 20, கண்ணன் வீட்டுக்கு வந்தார். அவரது
வீட்டுக்கு எதிரே வசிக்கும் வடமாநில நபரை தகாத வார்த்தையால்
திட்டியுள்ளார். அவரை மனைவியுடன் சேர்ந்து கண்ணன் வீட்டுக்கு வெளியே
தள்ளி கொண்டு சென்றனர். இதனால் கண்ணன் நெஞ்சில் கை வைத்து தள்ளியதில்
சாக்கடையில் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில், ஈரோடு
அரசு மருத்துவமனையில் கண்ணன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை
பலனின்றி இறந்தார். வீரப்பன் சத்திரம் போலீசார்
சங்கரை கைது செய்தனர்.
