ADDED : செப் 05, 2026 06:06 AM
ஈரோடு:ஈரோடு
வட்டார கல்வி அலுவலர் சார்பில், ஆசிரியர் தின விழா
கொண்டாடப்பட்டது.
கல்வி அலுவலர்கள் சாந்தி, வேலுச்சாமி தலைமை
வகித்தனர். கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்த்து
தெரிவித்து கொண்டனர். பரதநாட்டியம், பாட்டு, கவிதை வாசித்து,
தங்களது தனித்திறமைகளை ஆசிரியர்கள் வெளிக்காட்டினர். ஓய்வு பெற்ற
ஆசிரியை, ஆசிரியர்களை பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.
நடப்பாண்டு
நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான இரு ஆசிரியைகளுக்கும் பாராட்டு
தெரிவிக்கப்பட்டது. திண்டல் தொடக்க பள்ளி தலைமையாசிரியை புனிதவதி
வரவேற்றார். நிறைவில் எஸ்.கே.சி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
தலைமையாசிரியை சுமதி நன்றி கூறினார். விழாவில் ஈரோடு ஒன்றியத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த, 120க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
