ADDED : செப் 05, 2026 06:06 AM
கொடுமுடி:கொடுமுடியை
அடுத்த நடுப்பாளையம் மனக்காட்டுப்புதுாரை சேர்ந்தவர் வினோத், 32;
இறைச்சிக்கடை தொழிலாளி. இவரின் மனைவி பிரபாவதி, 25; தம்பதிக்கு ஏழு
வயதில் மகனும், இரண்டு வயதில் மகளும் உள்ளனர்.
பிரபாவதி பெண்
குழந்தையுடன் மகனை பள்ளியில் இருந்து அழைத்து வர கடந்த, 2ல் சென்றார்.
ஆனால், மூவரும் வீடு திரும்பவில்லை. வினோத் புகாரின்படி
வழக்குப்பதிந்த மலையம்பாளையம் போலீசார், குழந்தைகளுடன் மாயமான
பிரபாவதியை தேடி வருகின்றனர்.
* மொடக்குறிச்சி
சின்னியம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த பழனிச்சாமி மனைவி செல்வி,
35; மனநிலை பாதிக்கப்பட்டு காது கேட்காமல், வாய் பேச முடியாமல்
இருந்தார். கடந்த ஜூன், 18 ல் லக்காபுரம் தெற்கு குமாரபாளையத்தில்
முதியோர் இல்லத்தில் உறவினர்கள் சேர்த்தனர். இந்நிலையில் அவர்
மாயமாகி விட்டார். புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் தேடி
வருகின்றனர்.
