ADDED : செப் 05, 2026 06:05 AM

ஈரோடு:ஈரோடு
அருகேயுள்ள காவிரி ஆற்று பாலம் வழியாக, 70க்கும் மேற்பட்ட ரயில்கள்,
தினமும் பயணிக்கின்றன. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் சார்பில்,
காவிரி ஆற்று ரயில்வே இரும்பு பால பகுதியில், ஊழியர்கள்
தண்டவாளங்களை ஆய்வு செய்தனர்.
விரிசல் உள்ளதா, தண்டவாளத்தில்
கோளாறு உள்ளதா, போல்ட், நட்டுகள் சரிவர இணைக்கப்பட்டுள்ளதா
என்பது குறித்து தீவிரமாக ஆய்தனர். இரு தண்டவாளங்களுக்கு
இடையே உள்ள துாரம் சரிவர இருக்கிறதா என்பதை, இயந்திரம் மூலம் அளவீடு
செய்தனர். ரயில்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாக
தண்டவாளங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்,
குறித்த கால இடைவெளியில் இதுபோன்ற ஆய்வு, பராமரிப்பு
மேற்கொள்ளப்படுவது வழக்கம் என்று ரயில்வே அதிகாரிகள்
தெரிவித்தனர்.
