/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்
/
வேளாண் அறிவியல் நிலையத்தில் பொன்விழா கொண்டாட்டம்
ADDED : அக் 02, 2024 01:43 AM
வேளாண் அறிவியல் நிலையத்தில்
பொன்விழா கொண்டாட்டம்
கோபி, அக். 2-
கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், முதல் வேளாண் அறிவியல் நிலையம், 1974ல் புதுச்சேரியில் துவங்கப்பட்டது. அந்நிறுவனம் துவங்கி, 50 ஆண்டுகள், நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, அனைத்து வேளாண் அறிவியல் நிலையத்திலும், நடப்பாண்டு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, வேளாண் அறிவியல் நிலையத்தின் ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும், சுழற்சி முறையில் உலா வருகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்துக்கு வந்துள்ள ஜோதி, கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொன்விழாவை முன்னிட்டு, கோபி அருகே காசிபாளையத்தில் இயற்கை விவசாயம் மற்றும் பயிற்சி நடந்தது. முதன்மை விஞ்ஞானி மற்றும் அதன் தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கார்த்திக் முன்னிலை வகித்தார். விஞ்ஞானிகள் சரவணக்குமார், பச்சியப்பன் ஆகியோர் பேசினர்.