/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் அபாரம்
/
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் அபாரம்
ADDED : மே 09, 2025 01:41 AM
கோபி, கோபி வைரவிழா (நிதியுதவி) மேல்நிலைப்பள்ளியில், 192 மாணவர்கள் தேர்வெழுதியதில், 190 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர் எழில்வேந்தன், 592 எடுத்து முதலிடம், சினானந்த், 586 எடுத்து இரண்டாமிடம், விகாஸ், 577 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர்.
பொலவக்காளி
பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 95 பேரும் தேர்ச்சி பெற்றனர். வர்சினி, 569 எடுத்து முதலிடம் பிடித்தார். கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 238 பேரில், 235 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி நிஷா, 581 எடுத்து முதலிடம் பெற்றார். கோபி, கரட்டடிபாளையம், அரசு மேல்நிலைப்பள்ளியில், தேர்வெழுதிய, 72 பேரும் தேர்ச்சி பெற்றனர். மோகன பிரசாந்த், 553 எடுத்து முதலிடம் பிடித்தார்.
முருகன்புதுார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 137 பேரில், 133 பேர் தேர்ச்சி; கவுந்தப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 178 பேரில், 174 பேர் தேர்ச்சி பெற்றனர்.