/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதயாத்திரை சென்ற கோபி பக்தர் பலி; 5 பேர் காயம்
/
பாதயாத்திரை சென்ற கோபி பக்தர் பலி; 5 பேர் காயம்
ADDED : டிச 31, 2024 06:59 AM
தாராபுரம்: ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் ராமன், 60; கோபியை சேர்ந்த, 80 பேருடன், பழனி முருகன் கோவிலுக்கு கடந்த, 28ல் பாதயாத்திரை புறப்பட்டார். ஆங்காங்கே சிறு சிறு, குழுக்களாக பிரிந்து சென்றனர். இதில் ராமன் உள்ளிட்ட ஆறு பேர், தாராபுரம் அடுத்த குள்ளாயிபாளையம் அருகே நேற்று அதிகாலை, 5:45 மணியளவில் சென்றனர்.
அப்போது கோவையிலிருந்து மதுரை நோக்கி சந்தோஷ், 28, ஓட்டிச்சென்ற கால் டாக்ஸி, முருக பக்தர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமன், சம்பவ இடத்தில் பலியானார். அவருடன் சென்ற பொன்னுசாமி, 40, சுந்தரம், 45, துரையன், 41, அமுல்ராஜ், 40, மற்றொரு பொன்னுச்சாமி, 45, ஆகியோர் காயமடைந்தனர். அனைவரும் மேல் சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.