/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அசத்தல்
/
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அசத்தல்
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அசத்தல்
கோபி, கவுந்தப்பாடி அரசு பள்ளிகள் பத்தாம் வகுப்பு தேர்வில் அசத்தல்
ADDED : மே 17, 2025 01:11 AM
கோபி, கோபி மற்றும் கவுந்தப்பாடி அரசு பள்ளி மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அசத்தியுள்ளனர்.
கோபி வைரவிழா (நிதியுதவி) மேல்நிலைப்பள்ளியில், 184 பேர் எழுதியதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அகில், 483, இதயசூரியா மற்றும் ேஹமச்சந்திரன் தலா, 468 மதிப்பெண், குருபிரசாத், 459 மதிப்பெண் பெற்றனர். கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 188 பேரில், 186 பேர் தேர்ச்சி பெற்றனர். ஜனஸ்ரீ, 487, ஹர்சினி மற்றும் தனுஜாஸ்ரீ தலா, 486 மார்க், ஜெயஸ்ரீ, 484 மார்க் எடுத்தனர்.
கரட்டடிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 52 பேரும் தேர்ச்சி பெற்றனர். நந்தினி, 450, மவுதினி மற்றும் சுஜித்ரா, தலா 443 மார்க், தினேகா, 436 மார்க் எடுத்தனர். மொடச்சூர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 47 பேரில், 41 பேர் தேர்ச்சி பெற்றனர். ஜானகி கிருஷ்ணன், 467, அடிசாமேரி, 457, ரம்யா, 445 மார்க் எடுத்திருந்தனர்.
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், 177 பேரில், 171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆன்டனி ஜெபக்சன், 477, இளஞ்செழியன், 468, மகிந்தன், 455 மார்க் எடுத்துள்ளனர். பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 85 பேரில், 83 பேர் தேர்ச்சி பெற்றனர். பிரீத்தி, 469 மார்க் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார். முருகன்புதுார் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 61 பேரில், 59 பேர் தேர்ச்சி பெற்றனர். சாயாஸ்ரீ, 468, சவுதிகா, 462, கலைச்செல்வி, 456 மார்க் எடுத்திருந்தனர். பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர்.