/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்
/
கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்
கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்
கோபி கோட்ட வேளாண் குறைதீர் கூட்டம் நடக்கும் நேரம் மாற்றம்
ADDED : ஜூன் 09, 2025 03:25 AM
கோபி: தாளவாடி, சத்தி, நம்பியூர், கோபி, அந்தியூர், பவானி ஆகிய ஆறு தாலுகாவை உள்ளடக்கிய விவசாயிகளுக்கு, கோட்ட அளவி-லான வேளாண் குறைதீர் கூட்டம், கோபி ஆர்.டி.ஓ., ஆபீசில், மாதந்தோறும் இரண்டாவது வாரம் செவ்வாய்க்கிழமை மதியம், 3:00 மணிக்கு நடந்தது. இந்த நேரத்துக்கு கூட்டம் நடப்பதால், கறவை மாடு வைத்திருப்போர், பால் கறக்கும் பணி பாதிப்பதாக தெரிவித்து, நேரத்தை மாற்றுமாறு வலியுறுத்தினர். இதை ஏற்று நடப்பு மாத வேளாண் குறைதீர் கூட்டம், வரும், 10ம் தேதி காலை 11:00 மணிக்கு நடக்கும் என்று கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் அறிவித்துள்ளார்.
நேரம் மாறினாலும் ஏமாற்றமே...கூட்டம் நடக்கும் நேரத்தை மாற்றினாலும், கூட்டத்தால் எவ்-வித பலனும் இல்லை என்று, விவசாயிகள் வேதனை தெரிவிக்-கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கோபி கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், சம்பிரதாயத்துக்காக மட்-டுமே நடத்துகின்றனர்.
இதுவரை கொடுத்த எந்த மனு மீதும் நடவடிக்கை இல்லை. இதனால் கூட்டத்துக்கு வரும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்தபடியே உள்ளது. கடந்த மாதம் நடந்த கூட்டத்துக்கு ஐந்து பேர் மட்டுமே வந்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்-தால்தானே, விவசாயிகளும் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு கூறினார். நேரத்தை மாற்றிய ஆர்.டி.ஓ., சிவானந்தம், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளின் ஏமாற்றத்துக்கும் விடை
கொடுப்பாரா?