/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி மாணவ, மாணவியரை பாராட்டிய கோபி எம்.எல்.ஏ.,
/
பள்ளி மாணவ, மாணவியரை பாராட்டிய கோபி எம்.எல்.ஏ.,
ADDED : ஜூலை 17, 2025 01:58 AM
கோபி, கோபி சட்டசபை தொகுதியில், 44 லட்சம் ரூபாய் மதிப்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை, கோபி , அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.
கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பாரியூர், நஞ்சை கோபி, லக்கம்பட்டி, பா.வெள்ளா
பாளையம் உள்ளிட்ட பகுதியில், 44 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில், புதிய தார்சாலை, புதிய ரேஷன் கடை கட்டமைப்பு பணிக்கான பூமி பூஜையை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். அதையடுத்து கரட்டடிபாளையம் அரசு மேல்
நிலைப்பள்ளி, வெள்ளாள
பாளையம் மற்றும் குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில், கடந்த, 2024-2025 கல்வியாண்டில் நடந்த, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு
களுக்கான பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த, மாணவ, மாணவியரை பாராட்டி, பரிசு வழங்கி கவுரவித்தார்.
அப்போது கோபி அ.தி.மு.க., முன்னாள் யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன், ஒன்றிய செயலாளர்கள் குறிஞ்சிநாதன், தம்பி சுப்பிர
மணியம், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.